ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் நீக்கம்.. பிசிசிஐ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 ஒருநாள் தொடர், 3 டி20 தொடர், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட  உள்ளது. இந்திய வீரர்கள் 16 நாட்கள் கோரன்டைன் முடிவடைந்தது இதில் யாருக்கும் கொரோனா தோற்று இல்லை. 

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியோடு தொடங்கும் வேண்டும் என இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்தியா அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, தவான், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா உள்ளனர். 

அதேபோல், சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டுமென ஆஸ்திரேலியாவும் துடிப்புடன் களத்தில் இறங்குகிறது. இதனால், முதல் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த நிலையில், தற்போது அவர் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ishant sharma ruled out for test match


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal