அயர்லாந்தை அலறவிட்ட இங்கிலாந்து.. வில்லே பலே பலே.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகளில் முதல் ஒருநாள் போட்டியானது அங்குள்ள சவுத்தாம்பட்டனில் வைத்து நடைபெற்றது. 

போட்டியின் துவக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த்திருந்தது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 28 ரன்களுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. 

பின்னர் களமிறங்கிய கேம்பர் நிதானமாக விளையாண்டு அரைசதம் அடித்த நிலையில், 59 ரங்களுடன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் விளையாடினார். இவருடன் விளையாடிய மேக் பிரின் 40 ரன்களை எடுத்திருந்தார். 

ஒட்டுமொத்தமாக அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ரன்கள் சேர்த்து அணைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி சார்பாக வில்லே 5 விக்கெட் மற்றும் சாகிப் முகமது 2 விக்கெட் எடுத்தனர். 

இதனைத்தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 27.5 ஓவரில் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில்லேவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ireland England ODI Match England won 27.4 overs


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->