உலக சாம்பியனை ஊதித்தள்ளிய அயர்லாந்து! இங்கிலாந்தின் இமாலய இலக்கை விரட்டி பிடித்த அபார ஆட்டம்!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அயர்லாந்து அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 

இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சவுதம்பட்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் 1 ரன்னிலும், பெயர்ஸ்டோ 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜேம்ஸ் வின்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க 44 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

 

பின்னர் வந்த கேப்டன் மோர்கன், இளம் வீரர் பாண்டன்  இருவரும் நிலையாக நிலைத்து நின்று விளையாடி அந்த அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். ஒருபுறம் பாண்டன் அடக்கி வாசிக்க மோர்கன் மிரட்டலாக விளையாடினர். 25 ஆவது ஓவரின்போதே அவர் சதத்தினை அடித்துவிட்டார். அந்த அணி 190 ரன்கள் எடுத்திருந்த போது, கேப்டன் மோர்கன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய பாண்டனும் 58 ரன்களில் வெளியேறினார். 

பில்லிங்ஸ் 19 ரன்களில், மொயின் அலி 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின்வரிசை ஆட்டக்காரர்கள் வில்லே 51 , டாம் கர்ரன் 38 ரன்களை எடுக்க அந்த அணி 49.5 ஓவர்களில் 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. இதேபோன்று கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின்போது, பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து 329 ரன்களை இங்கிலாந்திடம் விரட்டிப் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் சம்பவம் நடக்கும்மா என எதிர்பார்த்திருந்த வேளையில், அந்த அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெலானி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை அடுத்து வந்த கேப்டன் பால்பிரின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங்குடன்இணைந்து விளையாடி அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இந்த இணையானது 214 ரன்கள் சேர்த்து இருந்தபொழுது துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட ரன் அவுட்டினால் 142 ரன்களை குவித்திருந்த ஸ்டிர்லிங் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கேப்டன் பால்பிரினும் 113 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி நேரத்தில் வந்த ஹெர்ரி டெக்டர் மற்றும் கெவின் ஓ பிரையன் அயர்லாந்து அணியை வெற்றி கோட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற டெக்டார் 29 ரன்களும்  பிரையன் 21 ரன்கள் எடுத்திருந்தனர். 49.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை ஊதித்தள்ளியது அயர்லாந்து. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ireland Chased down 329 against world champion England


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->