நம்பிக்கை நட்சத்திரங்களை இழந்த டெல்லி ஹைதராபாத்! சென்னையுடன் மோதபோவது யாரு?  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் இன்று மோதுகின்றன. லீக் போட்டி முடிவில் தொடரில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்த அணிகளான டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ஒரே மாற்றமாக கடந்த போட்டியில் ஆடிய காலின் இக்ராம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக காலின் முன்றோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த காகிஸோ ரபாடா தென்னாபிரிக்க திரும்பி விட்டதால் அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். 

அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை தூணாக இருந்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பெயர்ஸ்டோ அவரவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டதால் தற்போது புதிய தொடக்க ஜோடியுடன் களமிறங்கியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 2 வது தகுதி சுற்றில் சென்னை அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வியடையும் அணியானது தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Eliminater match dc vs srh


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal