ஒரே நாளில் தொடங்கும் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள்...! காரணம் என்ன?
IPL and PSL cricket matches starting on same day
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது .இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது IPL தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது.

இந்த ஆட்டம் 10.1 ஓவர்களில் நிறுத்தப்பட்டு மைதானத்திலிருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து IPL தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக ''BCCI '' அறிவித்தது.
அதன் பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதையடுத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட IPL போட்டிகள் வரும் 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக BCCI தெரிவித்தது.
மேலும், மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த நிலையில், IPL போன்று பாதியில் நிறுத்தப்பட்ட 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி IPL போலவே வருகிற 17-ம் தேதி மீண்டும் தொடங்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
25-ந்தேதி வரை மொத்தம் 8 ஆட்டங்கள் நடக்கவுள்ளன. இதில், பாதுகாப்பு அச்சத்தால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
English Summary
IPL and PSL cricket matches starting on same day