ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா.? வாய்பிளக்கும் ரசிகர்கள்.!!
ipl 2021 prize money
ஐபிஎல் 14 வது சீசனில் லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. அதில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

வெளியேறுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியை வீழ்த்தி வீழ்த்தியது. 2வது தகுதி சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்த போதிலும் கடந்த ஆண்டு போன்ற இந்த ஆண்டும் பரிசுத்தொகை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, கோப்பை வெல்லும் அணிக்கு ரூபாய் 10 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ 6.25 கோடியும் வழங்கப்பட உள்ளது. பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மற்ற இரண்டு அணிகளுக்கு தலா 4.37 கோடி பரிசு வழங்கப்படும் என கூறப்படுகிறது.