#சற்றுமுன்: சூப்பர் ஓவரில் கோட்டைவிட்ட அணி! வார்னரின் போராட்டம் வீண்! - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடரில் இன்று 35 வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

அதன்படி, முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் திரிபாதி 23 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மான் கில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து நிதிஷ் ராணா 29 ரன்களும், ரஸல் 11 பந்தில் 9 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் மோர்கன் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினர். 

மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்து.

இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு, 163  ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. 

யில், ஜானி பேஸ்ட்ரோ 36  ரன்களும், கனே வில்லியம்சன் 29 ரன்களும்,  டேவிட் வார்னர் 47 ரன்களும், அப்துல் சமத் 23 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து நடந்த சூப்பர் ஓவரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  2  ரன் எடுக்க, அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2020 SRK VS KKR SUPER OVER


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal