இண்டிகோ விமான குழப்பத்திற்கு நிவாரணம்...! பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 பயண வவுச்சர்...!
Relief Indigo flight disruption Affected passengers receive 10000 travel voucher
இந்த மாதம் நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தொடர் ரத்துகள் மற்றும் தாமதங்கள், ஆயிரக்கணக்கான பயணிகளை கடும் அவதிக்குள் தள்ளின. முன்பதிவு செய்து விமான நிலையங்களில் காத்திருந்த பயணிகள், விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
கடந்த டிசம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உடனடியாக டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்க மத்திய அரசு இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்தது.

இதனை தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை ரீபண்ட் செய்தது.இந்நிலையில், டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விமான சேவை ரத்து மற்றும் தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த வவுச்சர்கள் வரும் டிசம்பர் 26-ம் தேதி முதல் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளன.இந்த பயண வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்கள் வரை செல்லுபடியாகும் என்றும், இது மத்திய அரசின் விதிமுறைகளின் படி வழங்கப்பட வேண்டிய ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உள்ள இழப்பீடு தொகைக்கு மேலாக, இண்டிகோ நிறுவனம் சார்பில் கூடுதலாக வழங்கப்படும் சலுகை என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
English Summary
Relief Indigo flight disruption Affected passengers receive 10000 travel voucher