சாதனை மீள் சாதனை! டான் பிராட்மேனுக்கு இரண்டாம் இடத்தில் நம்ம ஜெய்ஸ்வால்!
INDvWI test cricket Don Bradman
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், கில் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்த ஆட்டத்தில் 150 ரன்களுக்கு மேல் சேர்த்ததன் மூலம் ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 23 வயதிற்குள் 150 ரன்களுக்கு மேல் பலமுறை அடித்த வீரர்கள் பட்டியலில், 8 முறை சாதனை படைத்த பிராட்மேனுக்குப் பிறகு, 5 முறை அந்த மைல்கல்லை எட்டிய வீரராக ஜெய்ஸ்வால் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த வரிசையில் இந்தியாவின் கிரிக்கெட் திலகம் சச்சின் டெண்டுல்கர் 4 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
English Summary
INDvWI test cricket Don Bradman