பயிற்சி ஆட்டங்களுக்காக பிரிஸ்பேன் சென்று அடைந்த இந்திய அணி! - Seithipunal
Seithipunal


முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட உள்ள இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 45 போட்டிகள் இந்த உலக கோப்பையில் நடைபெற உள்ளது. நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்கள் சிட்னி மற்றும் அடிலெட்டில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணியில் இடம்பெற்ற பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன் பின் அவரிடத்திற்கு தேவையான மாற்று வீரரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியம் முயற்சி செய்து வந்தது. இறுதியில் நேற்று இந்திய அணியின் 15 வது வீரராக வேக்கப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி இரண்டு பயிற்சிய ஆட்டங்களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. அதன்படி வரும் 17ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும், 19ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த இரு பயிற்சி ஆட்டங்களை விளையாட இந்திய அணி தற்பொழுது பிரிஸ்பேனை சென்றடைந்துள்ளது. ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாட உள்ள இந்த பயிற்சி ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian team reached Brisbane for practice matches


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->