கேரளாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனம்.. வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடியது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேரளா வந்துள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், கோயில் வெளியே இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளுடன் வரிசையாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian players pray Kerala Bhathmanaba swamy temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->