இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் திடீர் விசிட்! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ரெய்னா சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட போது அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ரெய்னா பல்வேறு போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். 

அது போல் தோனி தலைமையில் வீரர் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக துணை கேட்டனாக விளையாடி ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்துள்ளார். 

விளையாட்டை விட தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில் இந்திய அணியில் இருந்து ஒரே நாளில் ஓய்வு பெற்றனர். 

இதற்கிடையே கடந்த சில வருடங்களாக இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவை ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியானது. 

இந்த வதந்திக்கு கடந்த ஐபிஎல் சீசனில் ரெய்னா தோனியை சந்தித்து பேசி முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் ரெய்னா காஞ்சியில் உள்ள தோனியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார். 

அப்போது தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரெய்னா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இரவு விருந்துக்கு நன்றி என தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team Ex players visit Viral photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->