புதிய சாதனையை படைக்கபோகும் இந்திய கேப்டன் சுப்மன் கில்! என்ன சாதனை தெரியுமா?
Indian captain Shubman Gill is about to set a new record Do you know what record
இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனுமான சுப்மன் கில், தனது சர்வதேச வாழ்க்கையில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டும் தருவாயில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார் கில். இந்த தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை பெர்த்தில் தொடங்குகிறது.
ஒருநாள் போட்டிகளில் கில் இதுவரை மொத்தம் 2,775 ரன்கள் எடுத்துள்ளார்.அடுத்த மூன்று போட்டிகளில் 225 ரன்கள் எடுத்தால், அவர் 3,000 ரன்கள் கிளப்பில் இணையும். இது அவரது இன்னிங்ஸ் சராசரி மற்றும் தொடர்ச்சியான பங்களிப்பை கணக்கில் கொண்டால், சாத்தியமான சாதனையாகும்.
கில் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் 280 ரன்கள் எடுத்துள்ளார் — சராசரி 35. இதில் ஒரு சதம், ஒரு அரைசதமும் அடங்கும்.ஆஸ்திரேலிய மண்ணில் அவர் இதுவரை ஒரு ஒருநாள் போட்டி மட்டுமே விளையாடியுள்ளார், அதில் 33 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கில்லுக்கு இது முதல் சவால்.
அவரின் தலைமைத்துவத்துடன் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் மோதுகிறது.
முதல் ஒருநாள் – அக்டோபர் 20, பெர்த்
இரண்டாவது – அக்டோபர் 23
மூன்றாவது – அக்டோபர் 25
டி20 தொடர் – அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இது கில்லின் கேப்டன்சி பயணத்தின் முதல் பெரிய கட்டம் ஆகும்.
கேப்டனாக தனது முத்திரையை பதிப்பதோடு, பேட்டிங்கிலும் அதே அதிரடியை வெளிப்படுத்துவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு! 🏏
English Summary
Indian captain Shubman Gill is about to set a new record Do you know what record