எட்டு ஓவர் ஆட்டத்தில் ஆடுகிறது இந்தியா - ஆஸ்திரேலியா!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று  20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எவ்வாறு வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியானது இன்று நாக்பூரில் நடைபெறுகிறது.

நேற்று இரவு விடிய விடிய கடுமையான மழை பெய்ததன் காரணமாக இன்று ஆட்டம் நடக்குமா என சந்தேகம் நிலவியது. பகலில் நல்ல வெயில் காரணமாகவும், மழை இல்லாததன் காரணமாகும் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

7:00 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், 7 மணிக்கு ஆய்வு செய்யப்படுவதாகவும், பின்னர் 8 மணிக்கு ஆய்வு செய்யப்படுவதாகவும், பின்னர் 8:45 ஆகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 8:45க்கு ஆய்வு மேற்கொண்ட நடுவர்கள் இந்த போட்டியினை நடத்தலாம் என தெரிவித்திருக்கின்றனர். 9 15 மணிக்கு டாஸ் போடப்பட்டு 9 30 மணிக்கு தொடங்கும் எனவும், 8 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக இந்த ஆட்டம் நடைபெறும் எனவும், ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக இரண்டு ஓவர்களை வீசலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் நீக்கப்பட்டு ரிஷப் பாண்ட், ஜஸ்பிரிட் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india won the toss and decided bowl first at nagpur


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal