இந்தியா-வெஸ்டிண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டி.. இந்திய அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் 68 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் விளையாடிய 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 64 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்டிண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஹர்ஸ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார் மற்றும் ரவிந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won by 68 against West Indies in 1st t20


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->