IND vs PAK || மழை வெற்றி பெற்றதால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பையில் 3வது போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை இனறு எதிர்கொண்டது. இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

இருவரும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது. அப்போது இந்திய அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் மட்டுமே இடத்தில் இருந்தது.

சிறிது நேரத்தில் மழை நின்றதால் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் பொறுமையுடன் ஆடிய இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. முதல் இன்னிங்சில் 48.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் இஷான் கிஷன் 82 ரன்னும், ஹர்திக் பாண்டியா 87 ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் சாஹீன் அப்ரிடி 4 விக்கெட்களையும், ஹாரீஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால் 2வது இன்னைக்கு தொடங்குவதற்கு முன்பு மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதமானது. அவ்வப்போது மழை நின்றதால் இரண்டு முறை போட்டி துவங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மழை மீண்டும் குறுக்கிட்டு நீடித்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs Pakistan match called off due to rain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->