ருத்ரதாண்டவம் ஆடிய கோலி! ராகுல், ரோஹித் அபாரம்! இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா! - Seithipunal
Seithipunal


இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடே நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 240 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. 

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றது. தொடரை நிர்ணயிக்கும் 3-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்படி இந்திய அணி மீண்டும் முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளது.  இந்த நிலையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் இருவரும் அசத்தலான தொடக்கத்தினை கொடுத்தனர். 

அதிரடியாக ஆடிய ரோஹித் 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 5 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவர் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 34 பந்துகளில் 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல லோகேஷ் ராகுலும் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். 29 பந்துகளில் அரை சதம் அடித்து ராகுல் 55 பந்துகளில் 91 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இடையில் வந்த ரிஷப் பாண்ட் வந்த வேகத்தில் விளாச முயற்சிக்க சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். 


 
ரிஷப் பண்ட் அவுட் ஆனதும் களமிறங்கிய விராட் கோலி முதலில் சில பந்துகள் தடுமாறினாலும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அவர் 21 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை கதற வைத்துள்ளார்.  இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை குவித்துள்ளது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india set huge target to west indies in final T20I


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->