இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியின் புதிய சாதனை.!! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியை நேற்று ஆடியது. முதல் போட்டியில் அமோக வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது நாள் போட்டியை அபாரமாக வெற்றி பெற்றது. 

நேற்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பீல்டிங் செய்தது. இலங்கை அணி நிதானமாக ஆடியது. 9 விக்கெட்டை இழந்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 275 ரன்கள் எடுத்தது. 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.  

கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா-13, ஷிகர் தவான்- 29, இஷன் கிஷன் - 1, மணீஷ் பாண்டே - 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா டக் அவுட்டானார். குருணால் பாண்ட்யா - 35 ரன்களில் வெளியேறினார். 

இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழப்புக்கு 193 ரன்களை எடுத்து தத்தளித்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர் - புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடினார். தீபக் சாஹர்  66 பந்துகளில் அரைசதம் அடித்தார். அந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் என அனைத்து விதமான போட்டிகளிலும் அதிக வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா பெற்றுள்ளது. இந்தியா 126 வெற்றிகள், பாகிஸ்தான் 125 வெற்றிகள் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India new record for India vs Srilanka match


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->