“இந்தியா எனக்கு இதயத்தைக் கொடுத்த நாடு” – இந்தியர்கள் இதயத்தில் நானும் இருக்கேன்.. கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி - Seithipunal
Seithipunal


உலக கிரிக்கெட்டில் இந்தியா மிக வலுவான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவங்களிலும் இந்திய அணி நிரந்தரமாக டாப் தரவரிசையில் இருப்பது வழக்கம். இந்திய மண்ணில் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் இந்தியா சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த வலுவான அணியை, அதன் பண்பாட்டையும், மக்களின் அன்பையும் விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் பலர் உள்ளனர். தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் (Jonty Rhodes) இந்தியாவுக்கான அன்பில் கோவாவிலேயே தங்கி வாழ்கிறார். தனது மகளுக்கு கூட “இந்தியா” என்ற பெயர் வைத்தவர்.

அதேபோல இங்கிலாந்தின் முன்னணி நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் — இந்திய ரசிகர்களின் பிரிய வீரர். இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் மிகுந்த அன்பு, மரியாதை கிடைக்கிறது என்பதை அவர் முறையாகப் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில், “ஏன் நீங்கள் இந்தியா பற்றியே இத்தனை அன்பாக பேசுகிறார்கள்?” என்ற கேள்விக்கு பீட்டர்சன் உணர்ச்சி மிகுந்த பதில் அளித்துள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டது:“20 ஆண்டுகளாக நான் இந்தியாவுக்கு வந்தபோது ஒருபோதும் மரியாதையின்மை, எதிர்மறை எண்ணம், முதுகில் குத்துதல் ஆகியவற்றை சந்தித்ததில்லை. ஒவ்வொரு முறையும் அன்பும், இரக்கமும், மரியாதையும், நட்பும் தான் கிடைத்துள்ளது.”

மேலும் அவர் கூறினார்:“இந்தியாவில் எனக்கு கிடைத்த நண்பர்கள் — குடும்பம் போல. நான் கிரிக்கெட் மூலம் இந்திய மக்களின் மரியாதையை சம்பாதித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். ஒரு நாடும் அதன் மக்களும் உங்களுக்கு நேர்மறை எனர்ஜி கொடுத்தால், நீங்கள் திரும்ப வழங்கும் அன்பும் பத்து மடங்கு அதிகரிக்கும்.”

பீட்டர்சன் தனது பதிவை உணர்ச்சியுடன் முடித்தார்:“இந்தியா முதலில் எனக்கு அதன் இதயத்தை கொடுத்த நாடு. நான் என்றும் இந்தியாவுக்கு நன்றியுள்ளவனாகவே இருப்பேன்.”பீட்டர்சனின் இந்த பதிவை இந்திய ரசிகர்கள் பரவலாக பகிர்ந்து ரசித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India is the country that gave me my heart I am also in the hearts of Indians Kevin Pietersen resilience


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->