உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி: 02-வது முறையாகவும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!
India has won the Womens Kabaddi World Cup title for the second time
உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்திய அணி, இறுதிப் போட்டியில் 35 - 28 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 02-வது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டியில், 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி முதலிடமும், வங்கதேச அணி இரண்டாவது இடமும், 'பி' பிரிவில் சீன தைபே முதலிடமும், ஈரான் 02-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதில், இந்தியா-ஈரான் அணிகள் முதல் அரையிறுதி போட்டியில் மோதியது. இதில், இந்திய அணி 33 -21 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் 25-18 என்ற புள்ளி கணக்கில் வங்கதேச அணியை, சீன தைபே அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து இன்று நடந்த இந்தியா - சீன தைபே அணிகள் இறுதிப்போட்டியில், 35-28 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரிடையே இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
English Summary
India has won the Womens Kabaddi World Cup title for the second time