பரிதாபமாக சுருண்டது இந்திய அணி! ஏமாற்றமளித்த பேட்ஸ்மேன்கள்! நியூசி பவுலர்கள் அபாரம்!  - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது. முதல் நாள் முழுவதும் மழையின் காரணமாக ரத்தான நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 146 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. விராட் கோலி மற்றும் அஜின்க்யா ரகானே களத்தில் நின்றனர். இன்று ஆட்டம் தொடங்கியதும் கோலி 44 ரன்களிலும், ரஹானே 49 ரன்களில் ஆட்டமிழக்க அதற்கடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரவிச்சந்திரன் அஸ்வின் 22 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 15 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 217 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.

நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நீல் வாக்னர் 2 விக்கெட்டும் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும் டிம் சவுத்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India all out for 217 runs in WTC final 1st innings


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->