விஜய்–சங்கீதா விவாகரத்து சர்ச்சை: இனிஷியலுக்கு கூட அப்பா வேண்டாம்.. விஜய் மகன் ஜேசன் அதிரடியாக செஞ்சிட்டாரு!
Vijay Sangeetha divorce controversy Even the initials don't need a father Vijay son Jason took action
நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா மற்றும் நடிகை திரிஷா குறித்து வெளியாகி வரும் தகவல்கள் கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் பெரிய விவாதமாக மாறியுள்ளன. கடந்த மாத இறுதியிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல செய்திகள் வெளியாகி வருவதால் சமூக வலைதளங்களிலும் இதுவே பேசுபொருளாக உள்ளது.
விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. அந்த மனுவில் விஜய்க்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியானதும் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் சங்கீதா, தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் என்றும், அதற்காக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இன்னொரு மனுவை தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விஜய் தனது கட்சியின் மகளிர் அணி கூட்டத்தில் பேசிய போது, “இந்த விஷயத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். அந்த அளவுக்கு இது வொர்த் இல்லை” என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் சாஷா பற்றியும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், பெற்றோருக்கிடையிலான பிரச்சினை காரணமாக குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்படலாம் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் ‘சிக்மா’ என்ற திரைப்படம் தொடர்பாக ஒரு விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த படத்தின் போஸ்டரில் இயக்குநர் பெயராக “Jason Sanjay S” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் உள்ள “S” என்பது அவரது தாயார் சங்கீதாவை குறிக்கிறது என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது தந்தையான விஜய்யின் பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்தாமல் தாயின் பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஊகங்களும் பரவி வருகின்றன.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த விவகாரம் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது.
English Summary
Vijay Sangeetha divorce controversy Even the initials don't need a father Vijay son Jason took action