பக்தியில் திளைக்கும் தளபதி...! நேற்று திருச்செந்தூர், இன்று சீரடி...! - அடுத்து எங்கே...?
commander steeped devotion Yesterday Tiruchendur today Shirdi Where next
தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் விஜய், நேற்று அதிகாலை ஆன்மிக நிம்மதியை நாடி திருச்செந்தூர் முருகன் கோவில் சென்றார்.

அங்கு கடல் நீரில் புனித ஸ்நானம் செய்து, அதன்பின் அரிய விஸ்வரூப தரிசனத்தை மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், செந்தூர் முருகப்பெருமானின் அருளை குறிக்கும் வேல் ஒன்று நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஆன்மிக பயணத்தை நிறைவு செய்த உடனே சென்னை திரும்பிய விஜய், தனது இஷ்ட தெய்வமான ஷீரடி சாய் பாபா அவர்களின் திருக்கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை சுமார் 10.30 மணியளவில், மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபா கோவில் சென்று அவர் வழிபாடு நடத்த இருப்பதாக த.வெ.க. வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
commander steeped devotion Yesterday Tiruchendur today Shirdi Where next