தந்தை மறைவுக்குப் பின் வாரிசுக்குக் கிடைத்த அரியணை.... ஈரானின் உச்சபட்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் ஈரானின் அதிகார மையத்தை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அந்நாட்டின் ஆன்மீக மற்றும் அரசியல் வழிகாட்டியான அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரிழப்பைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த 'நிழல் அதிகாரத்தை' நிர்ணயிப்பதற்காக மதகுருமார் கவுன்சில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டது.

ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில், காமேனியின் வாரிசான மொஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

தந்தையின் மறைவுக்குப் பிறகு, போர்க்களத்தின் நெருக்கடிகளுக்கு மத்தியில் மகுடம் சூடியுள்ள மொஜ்தபா, ஈரானின் எதிர்காலத்தை எத்தகைய வியூகங்களுடன் வழிநடத்துவார் என்பதே தற்போது உலக நாடுகளின் உற்றுநோக்காக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

throne that inherited by heir after death his father Mojtaba Khamenei elected Supreme Leader Iran


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->