'குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது'; திரிஷா கடும் கண்டனம்; வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்தீபன்..! - Seithipunal
Seithipunal


நடிகர் மற்றும் தவெக தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண விழாவில் விஜய் கலந்துகொண்டார். அப்போது  இந்த திருமண விழாவிற்கு நடிகை த்ரிஷாவுடன், விஜய் ஒரே காரில், ஒரே நிற பட்டாடை அணிந்து கலந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பாக நேற்று தவெக கட்சியின் மகளிர் தின விழா நிகழ்வில் பேசிய விஜய், “தற்போது நடைபெறும் விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். அது அந்த அளவுக்கு ஒர்த் இல்லை.” என்று சர்வ சாதாரணமாக பேசியிருந்தார். விஜயின் இந்த பேச்சும் சமூக வலைத்தளங்களில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசியிருந்தார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மேடையில் பேசிய பார்த்திபனிடம், அவருடன் நடித்த நடிகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பார்த்திபன், 'குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது. நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருக்கும். எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. அதனால் சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.' என்று பேசியிருந்தார்.

பார்த்திபனின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ''சமீபத்திய நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால், ஒரு நபர் தனது உதவியாளர் மூலம் தெரிவித்த வேண்டுகோளின் பேரில் எனது பெயரும் படமும் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மைக்கில் பேசுவதால் முட்டாள்தனமான கருத்து சரி ஆகிடாது; அறிவில்லாமல் பேசும் வார்த்தைகள் பேசப்படுபவரை விட பேசுபவரின் சுயரூபத்தையே காட்டும். இந்தக் கருத்து முட்டாள்தனமானது” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நடிகர் பார்த்திபன், 'எது  நடந்ததோ அது  தவறாகவே நடந்துள்ளது. இதில், வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை' எனப் பதிவிட்டுள்ள அவர், 'எனது பேச்சு குந்தமாகிவிட்டது. வார்த்தை ஜாலத்துக்காக பேசியது தவறாகிவிட்டது' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Parthiban expresses regret for speaking about Trisha


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->