இந்தியா 189 ரன்களுக்கு ஆல் அவுட்... தடுமாறும் தென்னாப்பிரிக்கா அணி!
India 189 runs first Test against South Africa
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) 159 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா (முதல் இன்னிங்ஸ்) 189 ரன்களுக்கு ஆல் அவுட்.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா சார்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகளும், யான்சென் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தின் போது, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாகப் பாதியிலேயே பேட்டிங்கில் இருந்து வெளியேறியது இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸ் நிலவரம்:
தென்னாப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், தேநீர் இடைவேளை வரை 30 ஓவர்களில் 84/6 ரன்கள் எடுத்துள்ளது.
அணியின் முதல் விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீழ்த்தி அசத்தினார்.
English Summary
India 189 runs first Test against South Africa