#Breaking : அடுத்தடுத்து அவுட்., ஆல்-அவுட்: இலங்கை அணிக்கு எளிய இலக்கு வைத்த இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய முன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஐந்து புதிய இளம் வீரர்களை களமிறங்கியுள்ள இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர் பிரிதிவ் ஷா 49 ரன்கள் எடுத்த போது சனகா வீசிய பந்தில் எல்பிடபல்யூ கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஷிகர் தவான் 13 ரன்கள் எடுத்த போது சமீரா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து, இன்று சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ள அதிரடி மன்னன் சஞ்சு சாம்சன், 46 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.

சுமார் 4.53 மன்னிக்கு மழை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம், இறுதியாக 6.28 மணிக்கு மீண்டும் தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால், 50 ஓவர்களுக்கு பதிலாக 47 ஓவர்கள் மட்டுமே என்றும், ஆட்டத்தில் மூன்று பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசவும், 2 பந்து வீச்சாளர்கள் முழுமையாக 10 ஓவர்கள் வீசவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மழைக்கு பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் மனிஷ் பாண்டே 11 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் 7 பவுண்டரிகளை விளாசி உள்ளார்.

அதேபோல் ஹர்திக் பாண்டியா 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க்க, இன்று சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ள நிதிஷ் ராணா 7 ரன்களிலும், கிருஷ்ணப்பா கௌதம் 2 ரன்களிலும், அகிலா தனஞ்சயா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மேலும் டேபியூட் வீரர் ராகுல் சாகர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இலங்கை அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ind vs sl last odi first half


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->