முதல் முறையாக சட்டமன்றம் சூடானது...! ரேவந்த் ரெட்டி வன்முறைத் பேச்சில் சர்ச்சை...! - Seithipunal
Seithipunal


தெலங்கானா சட்டமன்றத்தில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்களைப் பற்றி விவாதித்த போது, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மேற்கொண்ட பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவர் தெரிவித்ததாவது,"நமது அரசு மற்றும் விவசாயிகள் மீதான அர்ப்பணிப்புக்கு எதிராக கேள்வி எழுப்பினால், அவர்களை தோலுரிப்போம்; நாக்கையும் வெட்டிவிடுவோம்" எனும் கருத்து.

சபாநாயகரிடம் இருந்து பேச்சை நீக்கும்படி அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ரேவந்த் ரெட்டி பொதுமக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேலும், கடந்த பத்து வருடங்களில் எதுவும் செய்யாதவர்கள் தற்போது தண்ணீர் அனுமதி பெற முயற்சி செய்கிறார்கள்; இதனால் ஏன் அவமதிப்பு ஏற்படுகிறது எனவும் அவர் எதிர்விமர்சனம் செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இரண்டு நபர்களையும் ரெட்டி குறிப்பிட்டார்.இதன் பின்னணி அரசியலில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. பி.ஆர்.எஸ். கட்சி ரேவந்த் ரெட்டியின் பேச்சை “மலிவானது” என்றும், நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்றும் கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியே சென்றனர்.

அதேவேளை, பாஜக கூட கடும் கண்டனத்தை பதிவு செய்து, தேசிய தலைமை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தது,"காங்கிரஸ் தெலங்கானா சட்டமன்றத்தை ஒரு தெரு முனையாக மாற்றியுள்ளது.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஜனநாயக வரம்புகளை மீறி மூத்த தலைவர்களுக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது விரக்தி, ஆணவம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை வெளிப்பாடு.

இந்திய தேசிய காங்கிரசின் உண்மையான முகம் இதுதான்" எனவும் தெரிவித்தனர்.இதுகுறித்து, பி.ஆர்.எஸ் தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் ராகுல் காந்தி நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் எனக் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

For first time assembly session became heated Controversy erupts over Revanth Reddy inflammatory speech


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->