இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி.! முக்கிய வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா.?
IND vs SL 2nd T20 match
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி அபாரமாக வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இமாசலபிரதேச மாநிலத்திலுள்ள தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றாலும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்காமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ருதுராஜ் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை எனஅனைத்து தொடரிலும் இடம்பிடித்து வருகிறார். ஆனால் அவர் தொடர்ச்சியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கையில் காயம் ஏற்பட்டதாக கூறி அவர் நீக்கப்பட்டார். அவரின் காயத்தின் தன்மை சற்று அதிகமாக இருப்பதால் தொடர் முழுவதும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ருதுராஜ் இரண்டாவது போட்டியில் பங்கேற்க முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்திய உத்தேச பட்டியல் : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷ்ரேஸ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், ஜஸ்பரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், யுஜ்வேந்திர சாஹல்.