#Breaking: 276 ரன்கள் இந்தியாவுக்கு இலக்கு.. தோனி போல நினைத்து தூக்கி அடிக்க, ஆட்டமிழந்து வெளியேறிய அந்த வீரர்..! - Seithipunal
Seithipunal


ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் அமோக வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது நாள் போட்டியில் வெற்றியடையுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பீல்டிங் செய்து வருகிறது. 

முதலில் இலங்கை அணி சார்பாக களமிறங்கிய அவிஸ்கா பெர்னாடோ - மைனோட் பாணுகா ஆகியோர் அடித்து ஆட தொடங்கியது அணியின் ரன்களை அதிரடியாக உயர்த்தியது. இறுதியில், ராக்கெட் போல உயர்ந்த ஸ்கோர், அவர்களின் விக்கெட்டை சரித்து இந்திய ரசிகர்களை இன்பமுற வைத்தது. அவிஸ்கா பெர்னாடோ 71 பந்துகளில் 50 ரன்கள் அடித்து வெளியேற, பாணுகா 42 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். 

இதனையடுத்து, களத்தில் இறங்கிய பாணுகா ராஜபக்சே 1 பந்தில் ரன்கள் ஏதும் அடிக்காமல் யஷ்வந்தின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். பின்னர், களத்தில் டே செல்வா - சாரித் ஜோடி இருந்தது. 27 ஓவரில் 3 விக்கெட்டை இழந்த இலங்கை, 132 ரன்கள் எடுத்திருந்தது. டே செல்வா களத்தில் நின்று ஆட தொடங்கி, அணிக்கு ரன்களை குவிக்கும் கட்டாயத்தில் விளையாடிக்கொண்டு இருந்தார். 

இந்திய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் சுழற்றி வீசியதால் அவ்வப்போது இலங்கை வீரர்கள் தடுமாறினாலும், விக்கெட்டை முதலில் தக்கவைத்துக்கொண்டார்கள். இலங்கை அணி 27.2 ஓவரில் 4 விக்கெட்டை பறிகொடுத்து, 134 ரன்கள் எடுத்தது. டே செல்வா 45 பந்துகளில் 32 ரன்கள் அடித்து வெளியேறினார். இதனையடுத்து, களமிறங்கிய தசுன் 24 பந்துகளில் 14 ரன்கள் அடித்து வெளியேற, ஹஸரங்கா 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். 

இதனையடுத்து, களத்தில் சரித் அஸ்லங்கா - சமிகா ஜோடி காலத்தில் இருந்தது. இருவரும் நின்று அடித்து ஆட தொடங்கினர். 44 ஓவரில் 6 விக்கெட் இழந்த இலங்கை அணியில், களத்தில் இருந்த சரித் 55 பந்துகளில் 47 ரன்களும், சமிகா 17 பந்துகளில் 11 ரன்களும் எடுத்திருந்தனர். அணியின் மொத்த ரன்கள் 219 ஆக இருந்தது. இறுதி நேரத்தில் இலங்கை வீரர்கள் அடித்து ஆட தொடங்கியது, இந்திய ரசிகர்களிடையே பதைபதைப்பை கூட்டியது. 

இறுதிக்கட்டத்தில் 47.1 ஆவது ஓவரில் பெரும் இன்ப அதிர்ச்சியாக அசத்தலாக ஆடிய சரித் அவுட்டாகி வெளியேறினார். சுமார் 68 பந்துகளில் 65 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறியதால் இந்திய ஆட்டக்காரர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து, களத்தில் சமிகா - துஸ்மந்தா சமீரா ஜோடி களத்தில் இருந்தது. சமிகா ஏற்கனவே சரித்துடன் நின்று ஆடியதால் 25 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். 48.3 ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. 

49.1 ஓவரில் ஓவர் கான்பிடன்ஸில் டோனி போல நினைத்து தூக்கி அடித்த சமிராவின் பந்தை புவனேஸ்வர் கோழி போல பிடித்ததால் அவர் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 265 ரன்கள் குவித்தது. 49.2 ஆவது பந்தில் லக்ஷன் ரன்னவுட்டாகி வெளியேறினார். இறுதியாக சமிகா - கசன் ஜோடி களத்தில் இருந்தது. சமிகா 32 பந்துகளில் 40 ரன்கள் அடித்திருந்தார். கசன் 1 பந்தில் 1 ரன்கள் அடித்ததும் ஆட்டம் முடிந்தது. 9 விக்கெட்டை இழந்த இலங்கை முடிவில் 275 ரன்கள் எடுத்தது. 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND Vs SL 2 D ODI SriLanka Declare 276 Runs to India Win


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->