IND vs SA : 3வது டி20... வாழ்வா.? சாவா.? போட்டியில் இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  கட்டாக்கில் நடந்த 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று,  டி20 தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு வாழ்வா.? சாவா.? என்ற போட்டியாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்திய அணி தொடரை இழந்து விடும். 

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி கண்ட உற்சாகத்துடன் தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் களமிறங்க உள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. வெற்றி கணக்கு தொடங்க இன்றைய போட்டியில் தங்கள் பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி உள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SA 3rd T20 Match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->