3வது ஒருநாள் போட்டி இந்தியா பேட்டிங்.! தொடரை சமன் செய்யுமா இந்திய அணி? - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங் தேர்வு செய்துள்ளது.

ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற ஹார்திக் பாண்டியா தலைமையிலான டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார்.

இதில், முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி மழையால் முடிவில்லாமல் கைவிடப்பட்டது. இதனையடுத்து 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று காலை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதில் இன்று நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும். ஆனால், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் ஏற்கனவே முன்னிலையில் உள்ளதால் 2-0 என்று கணக்கில் தொடரை கைப்பற்றும். மேலும் மழையால் போட்டி கைவிடப்பட்டாலும் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்

இந்திய அணி 11 வீரர்கள் :

ஷிகர் தவான்(கேட்ச்), ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(வ), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து அணி 11 வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(சி), டேரில் மிட்செல், டாம் லாதம்(வ), க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ 3rd oneday international match India batting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->