இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி.. இந்தியா பேட்டிங்.. இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்.

ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற ஹார்திக் பாண்டியா தலைமையிலான டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இன்று காலை 7 மணிக்கு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணியை கொண்டு களமிறங்குகிறது. இந்திய அணியில் ஹர்ஸ்தீப் சிங் மற்றும் உம்ரான் இன்றைய போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்குகின்றனர்.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா நியூசிலாந்து அணிகள் இதுவரை 110 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 55 போட்டிகளில் இந்திய அணியும், 49 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் முடிவில்லை. ஒரே ஒரு போட்டி மட்டும் சமனில் முடிந்துள்ளது.

அணி விவரம்

நியூசிலாந்து அணி 11 வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவன் கான்வே(w), கேன் வில்லியம்சன்(c), டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, மேட் ஹென்றி.

இந்திய அணி 11 வீரர்கள் :

ஷிகர் தவான்(c), சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(w), ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ 1st ODI match India batting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->