லக்னோவில் நேர்ந்த கோர விபத்து...! தனியார் பயிற்சி மையத்தில் பற்றி எரிந்த தீ...! - 11 மாணவர்கள் பரிதாப பலி...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் லக்னோ அருகே உள்ள புரானியா கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து சில நிமிடங்களிலேயே கட்டுக்கடங்காமல் பரவி, அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பையும் சூழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

தீ மளமளவென பரவியதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு 14 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயின் தாக்கம் கடுமையாக இருந்ததால் மீட்பு பணிகள் மிகுந்த சவாலாக அமைந்தன.இந்த கோர விபத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த 11 மாணவர்கள் சிக்கி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.இந்த நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவம் குறித்து உடனடி கவனம் செலுத்தி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அடுக்குமாடி குடியிருப்புக்குள் இன்னும் 10 முதல் 12 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

terrible accident occurred Lucknow fire broke out private coaching center 11 students tragically died


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->