திமுக மீது மக்கள் கொண்ட அதிருப்தி தான் த.வெ.க.வின் எழுச்சி...! - கோட்டையில் திமுக ஆட்சியைப் பிரித்து மேய்ந்த அமைச்சர் ராஜ்மோகன்...!
tvk due people dissatisfaction DMK Minister Rajmohan who divided DMK government assembly
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் அனல் பறக்கும் சூழலில் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார்.
அவர் பேசியதாவது,“இருமொழிக் கொள்கை மற்றும் மாநில உரிமை பாதுகாப்பு போன்ற அடிப்படை விவகாரங்களில் திமுக எடுத்த நிலைப்பாடுகளையே த.வெ.க. அரசும் உறுதியாக தொடர்ந்து பின்பற்றி வருகிறது.‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கவும் இல்லை, அதன் அடிப்படை வடிவமைப்பை மாற்றவும் இல்லை.

அந்த திட்டம் தொடர்ந்து முழு வீச்சில் செயல்படும்.திமுக ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தி, ஏமாற்றம் மற்றும் விரக்திதான் த.வெ.க. உருவாகவும் வளரவும் முக்கிய காரணமாக அமைந்தது.தற்போதைய ஆட்சியில் மக்கள் நம்பிக்கையுடனும் மனநிறைவுடனும் வாழ்ந்து வருகின்றனர்.சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் பரவல் போன்ற தீவிர பிரச்சினைகளுக்கு கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் நிர்வாகத் தோல்வியே முக்கிய காரணம்.
தமிழகத்தில் ‘மின்தடை’ என்ற வார்த்தையை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பரவலாக அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சிதான்.விவசாயிகள் சங்கத் தலைவர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்ததும் திமுக ஆட்சிக் காலத்தில்தான்.‘நான் முதல்வன்’ என்று பெயர் வைத்துக் கொண்டு, ஒரே குடும்பத்தில் இருந்து மீண்டும் மீண்டும் முதலமைச்சர்கள் வருவது எந்த வகை அரசியல் என்பதை மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகளில் அரசியல் படங்கள் இடக்கூடாது என பேசியவர்கள், அரசு வழங்கிய மடிக்கணினிகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஏன் பதித்தார்கள்? கடந்த 3 ஆண்டுகளாக ‘தொழில்நுட்ப கோளாறு’ என்ற ஒரே காரணத்தை முன்வைத்து சட்டசபை நேரலை ஒளிபரப்பை முன்னாள் சபாநாயகர் தொடர்ந்து துண்டித்தார்.
அரசுப் பள்ளி வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.கூட்டணி கட்சியினர் தங்களது வசதிக்காக உயர்தர சோபாக்களை பெற்றுக் கொண்ட நிலையில், கூட்டணி தலைவர்களுக்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே.
‘சிங்கப்பெண்கள்’ திட்டம் குறித்து இனி யாரும் தவறான தகவல்களை பரப்பவோ, தவறாக விமர்சிக்கவோ அனுமதிக்க முடியாது.”இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
English Summary
tvk due people dissatisfaction DMK Minister Rajmohan who divided DMK government assembly