இன்று இந்தியா-வங்களதேசம் மோதும் முதல் ஒருநாள் போட்டி..வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? - Seithipunal
Seithipunal


இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து தொடரில் விளையாட சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கின்றனர்.

இதில், முதல் ஒரு நாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு டாக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர்

ஒரு நாள் போட்டிகளில் இந்தியா வங்காளதேச அணிகள் இதுவரை 36 போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 30 போட்டிகளில் இந்திய அணியும், 5 போட்டிகளில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லை.

ஒருநாள் தொடருக்கான அணி விவரம்;

இந்திய அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ, ஷாபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

வங்கதேச அணி வீரர்கள் ;

அனாமுல் ஹக், லிட்டன் தாஸ்(c), ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், அபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லா, நூருல் ஹசன்(w), மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், எபாடோட் ஹொசைன், யாசிர் அலி, நஜ்முல் ஹொஸ்கின் அலி, தசாயின் நசும் அகமது

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs BAN 1st oneday international match today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->