ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி! ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபார சதம்!
ind vs aus woman odi
இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களமிறங்கினர். ஆனால் அலிசா வெறும் 5 ரன்னில் அவுட் ஆனதால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் எலிஸ் பெர்ரி களமிறங்கி லிட்ச்ஃபீல்டுடன் கூட்டணியை அமைத்தார்.
இருவரும் இந்திய பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்டு ரன்களை வேகமாக சேர்த்தனர். லிட்ச்ஃபீல்ட் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடியார். பெர்ரி 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர்களைத் தொடர்ந்து ஆஷ்லி கார்ட்னர் 63 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சிறிதளவே ரன்கள் எடுத்ததால், ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய பக்கத்தில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகள் பெற்றனர். 339 ரன்கள் என்ற பெரிய இலக்கை எதிர்கொண்டு இந்தியா பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகள் நல்ல ஆட்டம் காட்டிய நிலையில், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 88 பந்தில் 89 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார்.
தீப்தி சர்மா (24) மற்றும் ரிச்சா கவுஸ் (26) சிறு பங்களிப்பை அளித்தனர். பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தன்னம்பிக்கையுடன் விளையாடி 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா தென் ஆப்பிரிக்காவுடன் கோப்பி வெற்றிக்கான இறுதிப் போட்டியில் மோத உள்ளது.