முதல் ஆட்டத்திலேயே அடிச்சு தூக்கிய வீரத்தமிழன்.! கொண்டாட்டத்தில் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இன்று 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் தொடங்கியது. 

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆரம்பித்திலேயே அதிர்ச்சியை கொடுத்தார்.

தவான் ஒரு ரன்னில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 9 ரன்கள் மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அடித்து ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்து 51 ரன்னில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

சஞ்சு சாம்சன் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரவீந்தர் ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடி 44 ரன்களுடன் களத்தில் நின்றார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு, 161 ரன்கள் சேர்த்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஃபிஞ்சும் ஷார்ட்டும் அதிரடியானதொரு தொடக்கத்தை அளித்தார்கள். தொடக்க ஆட்டக்காரர் ஃபிஞ்ச், சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஃபிஞ்ச் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

ஃபிஞ்ச்யை அடுத்து 12 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழந்தார். முக்கிய இரு வீரர்களின் விக்கெட் வீழ்ந்த பின்னால், மேக்ஸ்வெல்லை எல்பிடபிள்யூ முறையில் 2 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் நம்ம வீரத்தமிழன் நடராஜன் (தமிழக மக்களால் நட்டு என்று செல்லமாக அழைக்கப்படுபவர்). 

சர்வதேச டி20யில் இது அவருடைய முதல் விக்கெட்டாகும். அடுத்ததாக 34 ரன்கள் எடுத்த ஷார்ட் விக்கட்டையும் நடராஜன் தூக்கினார். சஹால் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் எடுக்க, தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான வாஷிங்டன் சுந்தர 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். நடராஜன் வீசிய 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1.0. என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முன்னதாக, இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனின் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகம் என்பதால், ஆட்டம் துவங்கும் முன் அவருக்கு டி20 அறிமுக தொப்பியை ஜஸ்பிரித் பும்ரா வழங்கினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus t20 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->