பழிதீர்த்த நியூசிலாந்து அணி! இந்த முறை கோப்பை உறுதி! இதை நோட் பண்ணிங்களா?! - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூஸிலாந்து அணியுடன் மோதியது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக ஜோ ரூட் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 77 ரன்கள், கேப்டன் ஜாஸ் பட்லர் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர் வில் யங் டக்-அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, கான்வேயுடன் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை 8 திசையிலும் சிதறடித்தனர்.

முட்டுசந்தித்தில் சிக்கிய எலி போல இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்த டேவன் கான்வே, 83 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் சதத்தை விளாசினார். 

ரச்சின் ரவீந்திரா 82 பந்துகளில், 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் தனது முதல் சதத்தை விளாசினார்.

இந்த சதம் மூலம் உலகக் கோப்பை தொடரில் இளம் வயதில் சதம் விளாசிய நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையையும் ரச்சின் ரவீந்திரா பெற்றுள்ளார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் 283 ரன்களை எடுத்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவன் கான்வே 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் விளாசினர். 

கடந்த 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நியூஸிலாந்து அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும், கடந்த 4 உலகக்கோப்பை தொடர்களில் முதல் சதம் அடிக்கும் வீரரின் அணிதான் உலக்கோப்பையும் வென்றுள்ளது.

கடந்த 2007 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், 2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் சேவாக், 2015 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா ஃபின்ச், 2019 உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் ரூட் முதல் சதம் விளாசி இருந்தனர்.

நடப்பு உலக கோப்பை தொடரில் முதல் சதத்தை பதிவு செய்த நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே பதிவு செய்துள்ளதால், நியூசிலாந்து அணி உலக கோப்பையை வெல்லும் என்று கணிப்பு உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WC 2023 ENG vs NZ


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->