வெளியானது ஐசிசி தரவரிசை பட்டியல்.! ஆதிக்கம் செலுத்தும் இந்தியா.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!!  - Seithipunal
Seithipunal


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது அதில் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

உலகக்கோப்பை  முடிந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று தொடர்கள் இந்திய அணி விளையாட உள்ளது அதற்கு வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் .மூன்று வகை போட்டிகளிலும் கோலியின் தலைமையில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியானது அதில் இந்திய அணியின் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் கோலி  நீடித்து வருகிறார். அதைபோல் முதலிடத்தில் பும்ரா நீடித்து வருகிறார்.

இதையடுத்து டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் 913 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் உள்ளார்.
இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா 881 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் ஜடேஜா, அஸ்வின் முறையை ஆறாவது மற்றும் பத்தாவது இடத்தில் இருக்கின்றனர்.

டெஸ்ட் சிறந்த ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, அஸ்வின் முறையே மூன்றாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கின்றனர்.

ஹர்திக் பாண்டியா ஒருநாள் போட்டிக்கான சிறந்த ஆல்ரவுண்டர் இடத்தில் பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்  ஐந்தாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc released list of top plyers in test match


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal