T20 தரவரிசை பட்டியல் : இந்திய பந்துவீச்சாளர்கள் ஹர்ஸ்தீப், புவனேஸ்வர் குமார் முன்னேற்றம்.!
ICC mens T20 bowling ranking
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா 704 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து 698 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இரண்டாவது இடத்திலும், 692 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 2 இடங்கள் முன்னேறி 11வது இடத்தையும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரு இடம் முன்னேறி 21வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 8 இடங்கள் முன்னேறி 40வது இடத்தைப் பிடித்துள்ளார்.
English Summary
ICC mens T20 bowling ranking