#IPL2022 : பெங்களூரை புரட்டி எடுத்த.. ஹைதராபாத் அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 36வது லீக் போட்டியில் ஹைதராபாத், பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்களை எடுத்தது. அந்த அணியில் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 12 ரன்களும் பிரபுதேசாய் 15 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்களை மட்டுமே எடுத்தனர்.

69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hyderabad beat by Bangalore by 9 wickets


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->