நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! விராட் கோலிக்கு பாராட்டு விழா.! - Seithipunal
Seithipunal


நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வருகிற 4-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி இந்திய அணியின் நடசத்திர வீரர் விராட்கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். 

மொகாலியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுவதால் இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் சார்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி டெஸ்ட் போட்டிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபடுபவர்களை தவிர மற்றவர்கள் யாரும் போட்டியை நேரில் காண அனுமதி இல்லை. குறிப்பாக போட்டியை நேரில் காண பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மொகாலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருக்கின்றன என்றும், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி போட்டியை நடத்துவதே நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 3 ஆண்டுக்கு பிறகு மொகாலியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்றும், அதை நேரில் காணும் வாய்ப்பை ரசிகர்கள் தவறவிட வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட்கோலியின் பேனர்கள் மைதானத்தின் சுற்றுபுறங்களில் வைக்கப்படும் என்றும், அத்துடன் இந்த போட்டியின் போது அவருக்கு பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hundredth Game for Virat Kohli


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->