சூப்பர் 08 போட்டிகள்; கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ஹெட்மயர்; ஜிம்பாபே பவுலர்களை பொளந்து கட்டிய வெஸ்ட் இந்தீஸ் 254 ரன்கள் குவிப்பு..! - Seithipunal
Seithipunal


10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடித்து வருகிறது. அதன்படி, சூப்பர் 08 சுற்றில், நேற்று நடந்த போட்டியில், இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிப் பெற்றுள்ளது.

இந்தியாவை மோசமாக வீழ்த்தி, சவுத் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றுள்ளது. 03 வது போட்டி, இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில், பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கினர்.

அணியின் தொடக்க வீரர்களாக கிங் மற்றும் சாய் ஹோப் களமிறங்கிய நிலையில், கிங் 09 ரன்னிலும் ஹோப் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சிம்ரன் ஹெட்மயர் மற்றும் பவல் ஆகியோர் ஜோடி சேர்ந்து வான வேடிக்கை காட்டினர்.

 இதில், அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 19 பந்தில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.

கிறிஸ் கெயில் 20 பந்தில் அரைசதம் அடித்திருந்த நிலையில் இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹெட்மயர் 19 பந்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வீரர்களில் ஒட்டுமொத்தமாக 08-வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய ஹெட்மயர் 34, பந்துகளில், 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் பவல் 35 பந்துகளில் 59 ரன்கள், செப்பர்ட் 21 ரன்கள் என ஆட்டமிழந்தனர். ரத்தபோர்ட் ஆட்டமிழக்காமல் 31, ஜேஸன் ஹோல்டர் 21 ரன்கள் என ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இந்தீஸ் அணி, 254 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாபே அணியின் சார்பில் நகரவே, முஷரபாணி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். எவன், கிரேமர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். அணியின் கேப்டன் ராஸாவின் பந்துகளை அனைத்து பேட்டர்களும் பொளந்து கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வேகமான அரைசதங்கள் அடித்த வீரர்கள் விவரம்:- 

01. யுவராஜ் சிங் 12 (இங்கிலாந்து) 2007
02. ஸ்டீபன் மைபர்க் 17 (அயர்லாந்து) 2014 
03. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 (இலங்கை) 2022 

04. க்ளென் மேக்ஸ்வெல் 18 (பாகிஸ்தான்) 2014
05. கேஎல் ராகுல் 18 (ஸ்காட்லாந்து) 2021 
06. ஷோயப் மாலிக் 18 (ஸ்காட்லாந்து) 2021 
07 தாசுன் ஷனகா 19 (ஓமன்) 2026

08. ஐடன் மார்க்ராம் 19 (நியூசிலாந்து) 2026 
09. ரோஹித் சர்மா 19 (ஆஸ்திரேலியா) 2024
10. ஹெட்மயர் 19 (ஜிம்பாப்வே) 2026 
11. கிறிஸ் கெய்ல் 20 (தென்னாப்பிரிக்கா) 2007


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hetmyer breaks Chris Gayles record with a fast half century


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->