சாய் சுதர்சனின் அதிரடி; ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி; புள்ளி பட்டியலில் முதலிடம்..!
Gujarat won by a huge margin by defeating Rajasthan
பிரீமியர் லீக் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ஆமதாபாத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படிமுதலில் களமிறங்கிய குஜராத் அணி 06 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. அணி சார்பாக, அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்களை எடுத்தார். பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி சார்பாக தீக்ஷானா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும், ஆர்ச்சர் சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

218 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, தொடக்க முதலே சறுக்க தொடங்கியது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 41, சிம்ரன் ஹெட்மயர் 52 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர்.
குஜராத் அணி சார்பாக, பிரதிஷ் கிருஷ்ணா 03 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், ரசித் கான் தலா 02 விக்கெட்டுகளையும், சிராஜ், அர்ஷத் கான், கேஜிரொலியா தலா 01 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இறுதியில் சகல விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மாத்திரம் எடுத்தது. இந்த காரணமாக குஜராத் அணி 58 ரன்களில் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது. நடப்பு ஐ.பி.எல் புள்ளி பட்டியலில் குஜராத் முதலிடத்திலும், ராஜஸ்தான் 07-வது இடத்திலும் உள்ளது.
English Summary
Gujarat won by a huge margin by defeating Rajasthan