IPL 2022 : டெல்லியை தோற்கடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 11வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களும்,  ஹார்டிக் பாண்டியா 31 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gujarat Titans beat Delhi capitals by 14 runs


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->