இங்கிலாந்து அணியின் வெற்றி செல்லாது.? வெளியான புதிய முடிவு.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது.

இதில் முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241  ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பி வந்ததன பின்னர் இங்கிலாந்து அணியும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் மட்டுமே எடுத்தனர் இதனால் இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் விளையாடும் நிலை வந்துள்ளது.

பின்னர் சூப்பர் ஓவர் முறையில் அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. 

16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. 

வெற்றியை முடிவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பவுண்டரி எண்ணிக்கை விதையை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது குறித்து பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐசிசியின் இந்த விதிமுறை குறித்து கடுமையாக சாடியுள்ளார். இந்த விதியை பயன்படுத்தி எப்படி இறுதி முடிவு எடுத்தார்கள் என்பது புரியவில்லை. ஐசிசியின் இந்த விதி ஆபத்தான வீதி. போட்டி டையில் முடிந்திருப்பதால், கடைசி வரை சிறப்பாக விளையாடிய இரண்டு அணிக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். 

என்னை பொறுத்தவரை இரண்டு அணிகளுமே வெற்றியாளர்கள் தான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியவை, இந்த விதிக்கு நான் உடன்படவில்லை. ஆனால் விதிகள் விதிகள்தான். உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.இறுதிவரை நியூசிலாந்து அணி போராடியது இன்னும் என் மனதில் நிற்கின்றது. இது வரலாற்றில் இடம்பெற்ற சிறப்புமிக்க இறுதிப்போட்டி என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam gambhir says ICC rule


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal