முன்னாள் சி.எஸ்.கே வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறை ரீதியாக சாதனை படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான சுரேஷ் ரெய்னா மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி.கே.கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Indian cricketer suresh raina get doctorate


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal