ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தோனி.? இன்று மதியம் பேஸ்புக் லைவில் ரசிகர்களுடன் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட்டிற்காக மிகச் சிறப்பான பங்கினை ஆற்றியவர். ஐ.சி.சி-யின் மூன்று வகையான உலகக் கோப்பையையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றவர்.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வினை அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும், சென்னையில் விளையாடிவிட்டு சொந்த ரசிகர்கள் மத்தியில் தான் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தும் விதத்தில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி சமூகவலைதளத்தில் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் தோனி தனது டிவிட்டர் பக்கத்தில் "செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் உங்களுக்கு ஒரு எக்ஸைட்டிங் ஆன நியூஸை சொல்ல உள்ளேன். அனைவரையும் அங்கு காண்கிறேன்" என்று ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அவரது இந்த பதிவு எதற்காக? தோனி என்ன கூறப்போகிறார்? என்பது குறித்த ஆவல் தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் தல தோனி இந்த ஐபிஎல் சீசன் உடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Indian cricketer MS Dhoni Facebook Live in today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->