'5 ஐ பி.எல். கோப்பைகளை வெல்ல 72 வருடம் ஆகும்'; ஆர்.சி.பி. அணியை கிண்டலடித்த முன்னாள் சி.எஸ்.கே. வீரர்..! - Seithipunal
Seithipunal


18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து,  6 ரன் வித்தியாசத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிமுதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

2008-ஆம் ஆண்டில்  இருந்து ஐ.பி.எல். போட்டியில் ஆடிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. இதனால் ஆர்.சி.பி அணி பல விமர்சங்களை எதிர்கொண்டது. ஆனாலும், அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே தான் இருந்தது.

இந்த ஆண்டு அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் ஒரு கோப்பையோடு தணிந்துள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியதால், இந்த வெற்றியை அணியின் வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர். இதனால், பெங்களூரு வில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆர்.சி.பி. அணி ஐந்து முறை ஐ.பி.எல். பட்டம் வெல்வது மிகவும் கடினம் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அத்துடன், ஆர்சிபி அணி 05 கோப்பைகளை வெல்ல 72 வருடங்கள் ஆகும் என அவர் கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக அம்பத்தி ராயுடு கூறியதாவது: ஆர்.சி.பி.க்கு இப்போது ஐ.பி.எல். வெல்வது எவ்வளவு கடினம் என்பது தெரிந்துவிட்டது. ஐந்து முறை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு முறை வெல்வதே இவ்வளவு கடினமாக இருக்கும்போது, ஐந்து முறை வெல்வது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, 18 வருடங்களில் பெங்களூரு அணி ஒரு கோப்பையை வென்றுள்ளது என்றால், 05 கோப்பைகளை வெல்வதற்கு அந்தணிக்கு 72 வருடங்களாகும். அவர்கள் வெற்றி பெறுவதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டது நல்லது, இல்லையா..? இப்போது அவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆர்.சி.பி. அமைதியாக இருக்கும். அவர்கள் வெற்றியாளர்கள் கிளப்பில் நுழைந்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former CSK player mocks RCB says it will take 72 years to win 5 IPL trophies


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->